திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோயிலில்  சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
X

கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் என்றழைக்கப்படும் சுவேத விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

முருகனின் நான்காவது படைவீடாக திகழும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலின் இணைகோயிலாக திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில் திகழ்கிறது. வாணிகமலாம்பிகை சமேத சுவேத விநாயகர்(வெள்ளை விநாயகர்), பெரியநாயகி சமேத சடைமுடிநாத சுவாமி திருக்கோயில் திகழ்கிறது.

இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயிலில் விநாயக சதுர்த்தி பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்விழா காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது, கொடிமரம் அருகே வாணி- கமலாம்பிகா சமேத சுவேத விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு விழா கொடியேற்றம் நடைபெற்றது.

இதை தொடர்ந்து வருகிற 11-ம்தேதி வரை நடைபெற உள்ள விழா நாட்களில் காலை - மாலை இருவேளைகளிலும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா உள் பிரகாரத்திலேயே நடைபெறவுள்ளது. விழாவின் முக்கியமாக 6-ம் தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடும், 8-ம் தேதி திருக்கல்யாணமும், 10-ம் தேதி காலை 7 மணிக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தேவேந்திரன் பூஜையும், மாலை மூஷிக வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.

நிகழாண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதி கிடையாது என்பதால், விநாயகர் சதுர்த்தி தினமான செப்.10-ம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால் கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது, மேலும், அன்றைய தினம் வழக்கமாக நடைபெறும் தேரோட்டமும் ரத்து செய்யப்படுகிறது என கோயில் அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story