கும்பகோணத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கல்

கும்பகோணத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கல்
X

கும்பகோணத்தில் திமுக இளைஞரணி செயலர் உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளையொட்டி முன்களப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவி

முன் களப்பணியாளர்கள் 700 நபர்களுக்கு 3 லட்சம் மதிப்பீட்டில் வேட்டி சேலை, 2 நபர்களுக்கு தையல் மிஷினும் வழங்கப்பட்டது

கும்பகோணத்தில் தஞ்சை மாவட்ட இளைஞரணி சார்பில் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, நகராட்சியில் பணியாற்றும் முன் களப்பணியாளர்களுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் குட்டி தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் வரவேற்றார். தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் ஆகியோர் முன் களப்பணியாளர்கள் 700 நபர்களுக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வேட்டி சேலையும், இரண்டு நபர்களுக்கு தையல் இயந்திரத்தையும் வழங்கினர்.

குடந்தை நகர செயலாளர் தமிழழகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராஜா, அருண்மொழி, ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் கோவி.அய்யாராசு வாழ்த்துரையாற்றினார். நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் அசோக்குமார், அண்ணாதுரை, அம்பிகாபதி, பொதுக்குழு உறுப்பினர் கவிதா கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வெங்கடேசன் நன்றி கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!