கோயில்களை திறப்போம்; கொரோனாவை ஒழிப்போம் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா நூதன போராட்டம்

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் வாசலில் கட்சி நிர்வாகிகள் அங்கப்பிரதட்சனம் செய்து அம்மன் வேடமணிந்து 108 தேங்காய்களை உடைத்து கோவில்களை திறக்க பிரார்த்தனை செய்தனர்.
கும்பகோணம்:
கோயில்களை திறப்போம் கொரோனாவை ஒழிப்போம் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் கும்பகோணத்தில் நூதன போராட்டம் நடந்தது.
கும்பகோணம் சாரங்கபாணி கோயில் வாசலில் கட்சி நிர்வாகிகள் அங்கப்பிரதட்சனம் செய்து அம்மன் வேடமணிந்து 108 தேங்காய்களை உடைத்து கோவில்களை திறக்க பிரார்த்தனை செய்து கொண்டனர்.
மதுக்கடையை திறக்கும் அரசு கோயில்களை திறப்பதற்கு தயக்கம் காட்டுகிறது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அனைவரும் மன சஞ்சலத்தில் இருக்கிறார்கள் மனக் குறைகளை போக்குவதற்கு ஒரே இடம் கோவில்கள் தான் அந்தக் கோவில்கள் அனைத்தும் பூட்டி கிடைப்பதால் எங்களுடைய மனக் குறைகளை சொல்ல முடியாமல் தவிக்கின்றோம்.
எங்களுடைய கோரிக்கையை ஏற்று அரசு கோயில்களை திறக்கும் வேண்டும். உடனடியாக கோயில்களை திறக்க மறுத்தால் வரும் நாட்களில் இதே இடத்திலே நூதன போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றுஇந்து மக்கள் கட்சி அனுமன் சேனா அமைப்பினர் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாநில செயலாளர் பாலா தலைமையில், ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் வேல்முருகன், நகர தலைவர் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய், மாவட்ட மாணவரணி செயலாளர் சத்தியமூர்த்தி, சித்தர் பேரவைத் தலைவர் பாரதிதாசன், ஆகியோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu