கோவிந்தபுரத்தில் விஸ்வ வித்யாலயா: தமிழக ஆளுநர் ரவி அடிக்கல் நாட்டினார்
கும்பகோணம் அருகே கோவிந்தபுரத்தில் விஸ்வ வித்யாலயா பள்ளிக்கு தமிழக ஆளுநர் ரவி அடிக்கல் நாட்டினார்
பாரத தேசத்தில் உள்ள 22 மாநிலங்களில் பரவி காணப்படும் சகல சாகைகளையும் ஓரிடத்தில் ஒன்று சேர்க்கும் முயற்சியாக அனைத்து சாகைகளுக்குமான அடிப்படை உயர்கல்வி மற்றும் ஹிந்து தர்மத்தை முழுமையாக உள்ளடக்கிய ஒரு விஸ்வ வித்யாலயா ஆடுதுறை அருகே கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தானில் தொடங்கப்படுகிறது.
இதில் 12 வேதாந்த சாகைகளுக்கும் ஒரே இடத்தில் தனித்தனி பாடசாலைகள் உள்ள சர்வ சாகா வித்யாலயா மற்றும் வேதபாஷ்ய, ஸ்ரௌத, சாஸ்திர கல்லூரிகள், ஸ்மார்த்த பிரயோக பாடசாலை, வைகானஸ ஆகம பாடசாலை, நவீன கல்வியுடன் திட்டமிடப்பட்டுள்ளது. 11ம் தேதி காலை மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், லட்சுமி குபேர ஹோமம், மாலை திருஷ்டி துர்கா ஹோமம், 12ம் தேதி சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம், அனுமன் மந்திரம் ஹோமம் நடந்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை சூரிய நமஸ்காரம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ஆவஹந்தி ஹோமம், வாஸ்து ஹோமம் நடைப்பெற்றது. காலை 9.30 மணி முதல் 11.30 மணிக்குள் பூமி பூஜை நடந்தது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். கோயில் ஸ்தாபகர் பிரம்ம ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் தலைமை வகித்தார். தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்தர் மகராஜ், சேங்காலிபுரம் பிரம்ம ஸ்ரீ ராமதீட்சதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விட்டல் ருக்மிணி சமஸ்தான் நிர்வாகப் பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். மகாமகோபத்யாய திராவிடமணி சாஸ்திரிகள் விளக்க உரையாற்றினார். நாராயணன் தொகுத்து வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu