கும்பகோணத்தில் 11 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு காய்கறி அலங்காரம்

கும்பகோணத்தில் 11 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு காய்கறி அலங்காரம்
X

காய்கறி அலங்காரத்தில் விஸ்வரூப ஆஞ்சநேயர்

ஆடி அமாவாசையை முன்னிட்டு உலக நன்மை வேண்டி கும்பகோணத்தில் 11 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சாஹம்பரா என்னும் காய்கறி அலங்காரம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு உலக நன்மை வேண்டி கும்பகோணத்தில் 11 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சாஹம்பரா என்னும் காய்கறி அலங்காரம் செய்து கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

கும்பகோணம் நீலத்தநல்லுார் சாலை காமராஜர் நகர் மெயின்ரோடு விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமிக்கு மாதந்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன்படி ஆடிஅமாவாசையை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணி முதல் சிறப்பு வழிபாடு தொடங்கியது.,

கொரோனா இல்லாத உலகை உருவாக்க வேண்டும், உலக நன்மைக்காகவும் பக்தர்கள் மகா சங்கல்பம் செய்து கொண்டனர்.

மேலும் தொடர்ந்து 5 மணி நேரம் அகண்ட ராமநாம பாராயணம், வருண ஜெபம், நாம சங்கீர்த்தனம், கூட்டு வழிபாடு நடைபெற்றது.

தொடர்ந்து மூலவர் மற்றும் 11 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சாஹம்பரா என்னும் காய்கறி அலங்காரம் செய்யப்பட்டிருந்ததை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமி பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!