பராமரிப்பு பணியால் கும்பகோணம் சுற்றியுள்ள கிராமங்களில் 29ம் தேதி மின் நிறுத்தம்

பராமரிப்பு பணியால் கும்பகோணம் சுற்றியுள்ள கிராமங்களில் 29ம் தேதி மின் நிறுத்தம்
X

பைல் படம்.

பராமரிப்பு பணியின் காரணமாக, கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் நாளை மறுநாள் 29ம் தேதி மின் நிறுத்தம் செய்ய உள்ளனர்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில், கும்பகோணம் புறநகர் உதவி செயற்பொறியாளர் மகாலிங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது :

திருப்புறம்பியம் துணை மின்நிலையத்தில் 29 ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் திருப்புறம்பியம், கொத்தங்குடி, வாளபுறம், மேலாத்துக்குறிச்சி, நீலத்தநல்லூர், இணைபிரியாள் வட்டம், காவற்கூடம், உத்திரை, முத்தையாபுரம், கடிச்சம்பாடி, கல்லூர், அகராத்தூர், தேவனாஞ்சேரி, சத்தியமங்கலம், கொந்தகை, திருவைகாவூர், அண்டக்குடி, பட்டவர்த்தி, ஆதனூர், புளியஞ்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!