சுற்றுலா உரிமம் பெறாத வாகனங்கள் வாடகைக்கு இயக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்

சுற்றுலா உரிமம் பெறாத வாகனங்கள் வாடகைக்கு இயக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்
X

கும்பகோணத்தில் நடைபெற்ற சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்க ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கம் வலியுறுத்தல்

சுற்றுலா உரிமம் பெறாத வாகனங்கள் வாடகைக்கு இயக்கப்பட்டு வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கும்பகோ ணத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்க ஆலோசனை கூட்டம் தஞ்சை மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் வெங்கடேஷ், தஞ்சை மாவட்ட துணைத் தலைவர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அனைத்து கோவில்கள் மற்றும் சுற்றுலா தளங்கள் மூடப்பட்டன. இதனால், நாங்கள் வாகனங்கள் இயக்கப்படாத நிலையில் உள்ளதால், போதிய வருமானம் இன்றி தவித்து வருகிறோம். தமிழக அரசு சாலை வரி, காப்பீட்டுத்தொகையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கொரோனா தொற்றால் உயிரிழந்த சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு அரசு நிவாரண உதவி தொகை வழங்க வேண்டும்.

மேலும் சரக்கு ஏற்றும் வாகனங்களில் பயணிகள் ஏற்றி செல்வதையும், சுற்றுலா உரிமம் பெறாத வாகனங்கள் வாடகைக்கு இயக்கப்பட்டு வருவதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பண உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், குத்தாலிங்கம், சகுந்தன், கார்த்திகேயன், சுரேஷ் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!