திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா
கும்பகோணம் திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது.
கும்பகோணம் அருகேயுள்ள திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயில் 108 வைணவ தலங்களில் 12வது தலமாகும். இத்தலத்தில் சாரநாதப்பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, நீலாதாட்சி, மார்பில் மகாலட்சுமி மற்றும் சாரநாயகி என பஞ்சலட்சுமிகளுடன் அருள்பாலிக்கிறார்.
வைகுண்ட ஏகாதசியினை முன்னிட்டு இன்று சாரநாதப்பெருமாள் அழகிய பட்டாடை மற்றும் சிறப்பு மலர் அலங்காரத்தில் மங்கல வாத்தியங்கள் முழங்க, பட்டாச்சாரியார் பாசுரங்கள் பாட, பரமபத வாசலை கடந்து வந்தார். அவருடன் நூற்றுக்கணக்கானோர் பரமபத வாசலை கடந்து வந்தும், பிரகார உலா வந்த பெருமாளை தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர்.
தொடர்ந்து கோயில் கொடிமரம் அருகே பெருமாள் எழுந்தருளி, ஆழ்வார்களுக்கு காட்சியளித்தார். அப்போது பாசுரங்கள் வாசிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆழ்வாராக வர, அவர்களுக்கு மலர் மாலைகள் சாற்றி, சடாரி மரியாதையும் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu