நாச்சியார்கோவில் லயன்ஸ் சங்கம் சார்பில் யுபிஎஸ் - பேட்டரி வழங்கும் நிகழ்ச்சி

நாச்சியார்கோவில் லயன்ஸ் சங்கம் சார்பில் யுபிஎஸ் - பேட்டரி வழங்கும் நிகழ்ச்சி
X

பன்னாட்டு லயன்ஸ் சங்கத்தின் நிறுவனர் மெல்வின் ஜோன்ஸ் 143-வது பிறந்தநாளை முன்னிட்டு  நாச்சியார்கோவில் அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவுக்கு யுபிஎஸ்- பேட்டரி வழங்கும் நிர்வாகிகள்

நாச்சியார்கோவில் லயன்ஸ் சங்கம் சார்பில் யுபிஎஸ் மற்றும் பேட்டரி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

பன்னாட்டு லயன்ஸ் சங்கத்தின் நிறுவனர் மெல்வின் ஜோன்ஸ் 143-வது பிறந்தநாளை முன்னிட்டு கும்பகோணம் தாலுக்கா நாச்சியார்கோவில் அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவுக்கு நாச்சியார்கோயில் லயன்ஸ் சங்கம் சார்பில் ரூபாய் 25 ஆயிரம் மதிப்புள்ள அதிக திறன் கொண்ட யுபிஎஸ் மற்றும் பேட்டரி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் ஸ்டீபன் தலைமையில், சங்க செயலாளர் பாலமுருகன், பொருளாளர் சுரேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக லயன்ஸ் மண்டலத் தலைவர் செல்வகுமார், வட்டார தலைவர் ராஜா ரகுபதி ஆகியோர், சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயந்தியிடம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் டாக்டர் தரண், டாக்டர் தீபலட்சுமி, டாக்டர் கார்த்திக் ராஜா, டாக்டர் சூர்யா, மருந்தாளர் வாசு மற்றும் மருத்துவப் பணியாளர்கள், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!