கும்பகோணத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா

கும்பகோணத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா
X
6 ஏழை மாணவ, மாணவிகளுக்கு இணையதள வகுப்பிற்கு பயன்படும் ஆண்ட்ராய்ட் மொபைல் போன் ரூ. 50,000 மதிப்பீட்டில் வழங்கப்பட்டது.

கும்பகோணம் மகாமக குளம் அண்ணா சிலை அருகே திமுக மாநில இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மாநகர திமுக சார்பில் கும்பகோணம் மாநகர செயலாளர் தமிழழகன் தலைமையில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், அரசு கொறடா கோவி.செழியன், கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் ஆகியோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் பொதுமக்களுக்கு கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கினர். மேலும் 6 ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு இணையதள வகுப்பிற்கு பயன்படும் வகையில் ஆண்ட்ராய்ட் மொபைல் போன் ரூபாய் 50,000 மதிப்பீட்டில் வழங்கப்பட்டது.

தொடர்ந்து ஹோலி ஏஞ்சல்ஸ் முதியோர் இல்லத்தில் 100 முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநகர துணை செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், பாஸ்கர், கணேசன், பேச்சாளர் வழக்கறிஞர் ஆடுதுறை உத்திராபதி, பொருளாளர் சோடா கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் முருகன், அனந்தராமன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்