இருசக்கர வாகன தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றவாளி கைது

இருசக்கர வாகன தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றவாளி கைது
X

முருகானந்தம்

கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் பகுதிகளில் டூவிலர் திருடி வந்தவர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் பகுதிகளில், இருசக்கர வாகன (சூப்பர் எக்ஸ் எல் மட்டும்) தொடர் திருட்டில், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதி அண்ணா நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முருகானந்தம் (36) என்பவர் ஈடுபட்டு வந்துள்ளார்.

அவரை, தஞ்சை மாவட்ட எஸ்பி ரவளிபிரியா உத்தரவின் பேரில், திருவிடைமருதூர் டிஎஸ்பி வெற்றிவேந்தன் மேற்பார்வையில், தனிப்படை எஸ்ஐ காமராஜ் தலைமையிலான காவலர்கள் திருவிடைமருதூர் ஒன்றியம் அணைக்கரை பகுதியில், வாகனச்சோதனையில் ஈடுபட்ட போது கைது செய்தனர். விசாரணையின்போது அவரிடம் இருந்து 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags

Next Story
ai in future agriculture