சுவாமிமலை அருகே நாய் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் கொத்தனார் பலி

சுவாமிமலை அருகே நாய் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் கொத்தனார் பலி
X

சாலை விபத்தில் இறந்த சேகர்

சுவாமிமலை அருகே நாய் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் காயம் அடைந்த கொத்தனார் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

சுவாமிமலை அருகேயுள்ள அலவந்திபுரம் நடுத் தெருவில் வசித்தவர் சந்தானம் மகன் சேகர் (38) கொத்தனார். இவரும் இவரது மனைவி ஜெயந்தியும் கடந்த 17ஆம் தேதி கும்பகோணத்தை அடுத்துள்ள சோழபுரம் மேலான மேடு கிராமத்தில் நிகழ்ந்த ஒரு துக்க நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் சொந்த ஊரான அலவந்திபுரம் திரும்பிய பொழுது சுவாமிமலை அருகே புளியஞ்சேரி மெயின் ரோட்டில் ராஜாகுளம் அருகில் அதிவேகமாக வந்த பொழுது எதிரே நின்ற ஒரு நாய் மீது மோட்டார் சைக்கிளை ஏற்றி விட்டார்.

இதில் தலைகுப்புற கீழே விழுந்த கொத்தனார் சேகர் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி ஆகிய இருவருக்கும் படு காயம் ஏற்பட்டது. உடனடியாக சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சு மூலம் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த கொத்தனார் சேகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!