டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு சுவாமிமலையில் அன்னதானம் வழங்கல்

டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு சுவாமிமலையில் அன்னதானம் வழங்கல்
X

டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு, அன்னதானம் வழங்கிய கட்சியினர். 

சுவாமிமலையில் டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு, அமமுக சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் விழா, கும்பகோணம் அருகே சுவாமிமலை பேரூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, சுவாமிமலை பேரூர் கழக செயலாளர் செந்தில்வேலன் தலைமையில் பேரூர் 4வது வார்டு ஆதிதிராவிடர் தெருவில் உள்ள அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேரூர் கழக அவைத் தலைவர் மணி, பொருளாளர் சீனிவாசன், துணைச்செயலாளர் முரளி மோகன், இணைச் செயலாளர் ரேவதி செல்வராஜ், வட்டச்செயலாளர் தெய்வேந்திரன் மற்றும் சுவாமிமலை பேரூர் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!