கும்பகோணம் காந்தி பூங்கா அருகே காவலர் பூமிநாதனின் உருவப்படத்திற்கு அஞ்சலி

கும்பகோணம் காந்தி பூங்கா அருகே காவலர் பூமிநாதனின் உருவப்படத்திற்கு அஞ்சலி
X

கும்பகோணம் காந்தி பூங்கா அருகே காவலர் பூமிநாதனின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய  இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா நிர்வாகிகள்

இனியும் இது போன்ற செயல்கள் நடக்காத வகையில் காவலர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

கும்பகோணம் காந்தி பூங்கா அருகே காவலர் பூமிநாதனின் உருவப்படத்திற்கு இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாநில பொதுச்செயலாளர் பாலா தலைமையில் அஞ்சலி செலுத்தியும், மோட்ச தீபம் ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து காவலர் பூமிநாதனின் படுகொலை குறித்து இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாநில பொதுச்செயலாளர் பாலா கூறுகையில், தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் கட்சிகளும், அமைப்பினரும் இதற்கு கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்திருந்தாலும் இனியும் காவலர்களின் துப்பாக்கிகள் மௌனம் காக்க கூடாது.

இனியும் இது போன்ற செயல்கள் நடக்காத வண்ணம் காவலர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எனவே காவல்துறைக்கு சங்கம் அமைத்துக்கொள்ள தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மற்றும் சிவசேனா சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறோம் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி சிவசேனா வேல்முருகன் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!