திருப்பனந்தாள் அருகே முதலை கடித்ததில் காயம் அடைந்த பெண்ணிற்கு சிகிச்சை

திருப்பனந்தாள் அருகே முதலை கடித்ததில் காயம் அடைந்த பெண்ணிற்கு சிகிச்சை
X

முதலை கடித்ததில் காயம் அடைந்த பானுமதி.

திருப்பனந்தாள் அருகே முதலை கடித்ததில் காயம் அடைந்த பெண்ணிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே அணைக்கரை மணகுண்ணம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி பானுமதி (வயது62) கொள்ளிடக்கரை அருகே அவரது வீடு உள்ளது. இந்நிலையில் கொள்ளிடக்கரை ஆற்றில் குளித்து விட்டு வீட்டுக்கு தேவையான மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கொள்ளிடக்கரையில் இருந்த முதலை இவரது இடது காலை கவ்விப் பிடித்தது.

பானுமதி காலை உதறியும் விடாத முதலை அவரது இடதுகாலை கவ்வி குதறியது. இதில் காயமடைந்த பானுமதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ராசிபுரம் பகுதியில் அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கான ஆலோசனை கூட்டம்!