தஞ்சாவூர் மாவட்டத்தில் 33 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் 33 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்
X
தஞ்சை மாவட்டத்தில் 33 துணை தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் 33 துணை தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.

துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்:

தஞ்சை மாவட்டத்தில் பணியாற்றி வரும் 33 துணை தாசில்தார்கள் இடமாற்றம் செய்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பணி இடமாற்றம் செய்யப்பட்டவர் விவரம் வருமாறு:-

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தார் பாலசுப்பிரமணியன் பேராவூரணி தாலுகா அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றி வந்த கலைவாணன் திருவையாறு தாலுகா அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், இங்கு பணியாற்றி வந்த வெங்கட்ராமன் பூதலூர் தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தாராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பாபநாசம்- பேராவூரணி

பாபநாசம் தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தார் சுப்பிரமணியன், பேராவூரணி தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தாராகவும், இங்கு பணியாற்றி வந்த கவிதா, பட்டுக்கோட்டை தாலுகா அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பட்டுக்கோட்டை தாலுகா அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தார் கண்ணகி, பேராவூரணி தாலுகா அலுவலக கூடுதல் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், இங்கு பணியாற்றிவந்த கிருஷ்ணமூர்த்தி, பட்டுக்கோட்டை தாலுகா அலுவலக கூடுதல் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கும்பகோணத்தில் சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட திட்ட துணை தாசில்தாராக பணியாற்றி வந்த கல்யாணகுமார் கும்பகோணம் தாலுகா அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், இங்கு பணியாற்றி வந்த பிரகாஷ் கும்பகோணம் தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருவிடைமருதூர் தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தார் வெங்கடேஷ், குடிமைப்பொருள் வழங்கல் துணை தாசில்தாராகவும், இங்கு பணியாற்றி வந்த செல்வம் பட்டுக்கோட்டை தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பட்டுக்கோட்டை-திருவையாறு

பட்டுக்கோட்டை தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தார் யுவராஜ், பூதலூர் குடிமைப்பொருள் வழங்கல் தனி துணை தாசில்தாராகவும், இங்கு பணியாற்றி வந்த ராதிகா, ஒரத்தநாடு வட்ட அலுவலக மண்டல துணை தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இங்கு பணியாற்றி வந்த திரிபுரசுந்தரி தஞ்சை கலெக்டர் அலுவலக என் பிரிவு தலைமை உதவியாளராகவும், இங்கு பணியாற்றி வந்த அருணாதேவி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக தலைமை உதவியாளராகவும், இங்கு பணியாற்றி வந்த வெண்ணிலா திருவையாறு தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவையாறு தாலுகா அலுவலகம் மண்டல துணை தாசில்தார் செந்தில் குமார், பட்டுக்கோட்டை வட்ட அலுவலக மண்டல துணை தாசில்தாராகவும், இங்கு பணியாற்றி வந்த ராஜகுமார், தஞ்சை குடிமைப்பொருள் வழங்கல் துணை தாசில்தாராகவும் இங்கு பணியாற்றி வந்த சமத்துவ ராஜ் கும்பகோணம் தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாபநாசம் தாலுகா அலுவலக கூடுதல் தலைமையிடத்து துணை தாசில்தார் பிரியா, மண்டல துணை தாசில்தாராகவும், இங்கு பணியாற்றி வந்த செந்தில்குமார், திருவிடைமருதூர் தாலுகா அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், இங்கு பணியாற்றி வந்த உத்தமசெல்வி, கும்பகோணம் தாலுகா அலுவலக கூடுதல் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், இங்கு பணியாற்றி வந்த மனோரஞ்சிதம் திருவிடைமருதூர் தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கலெக்டர் அலுவலகம்

திருவிடைமருதூர் மண்டல துணை தாசில்தார் மணிகண்டன், கும்பகோணத்தில் உள்ள சென்னை-கன்னியாகுமரி தொழில்தட திட்ட துணை தாசில்தாராகவும், தஞ்சை தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தார் செந்தில், தஞ்சை கலெக்டர் அலுவலக எச் பிரிவு தலைமை உதவியாளராகவும், திருவிடைமருதூர் தாலுகா அலுவலக கூடுதல் தலைமையிடத்து துணை தாசில்தார் தமயந்தி, பாபநாசம் தாலுகா அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் இங்கு பணியாற்றி வந்த கலைச்செல்வி, தஞ்சை வருவாய் நீதிமன்ற கண்காணிப்பாளராகவும், இங்கு பணியாற்றி வந்த உமாமகேஸ்வரி ஒரத்தநாடு தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தாராகவும், இங்கு பணியாற்றி வந்த தமிழ்வாணன் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக துணை தாசில்தாராகவும், இங்கு பணியாற்றிய சீனிவாசன் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக உதவியாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக தலைமை உதவியாளர் பழனிவேல், ஒரத்தநாடு தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தாராகவும், இங்கு பணியாற்றி வந்த பைரோஜா பேகம், தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக பி பிரிவு தலைமை உதவியாளராகவும், இங்கு பணியாற்றிய ஜெயகாந்தி தஞ்சை கலெக்டர் அலுவலக ஜே பிரிவு தலைமை உதவியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி