கும்பகோணத்தில் 16 பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம்

கும்பகோணத்தில் 16 பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம்
X

கும்பகோணத்தில் விதிமுறைகளை மீறிய 16 பேருந்துகளுக்கு பாேக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

கும்பகோணத்தில் 16 பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

கும்பகோணம் தஞ்சை மெயின் ரோடு, ராமன் - ராமன் சந்திப்பு சாலையில் ஏராளமான தனியார் பேருந்துகள் போலீசார் விதித்துள்ள வழிமுறைகளை பின்பற்றாமல் மாற்று வழியில் (ஒன் வே) செல்வதாக அப்பகுதியை சேர்ந்த பலர் போலீசாருக்கு தகவல் தந்தனர்.

இதையடுத்து கும்பகோணம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையில் 5க்கும் மேற்பட்ட போலீசார்கள் நேற்று முன்தினம் அவ்வழியில் செல்கின்ற தனியார் பேருந்துகளை கண்காணித்தனர். அப்பொழுது அவ்வழியில் விதிமுறைகளை மீறி பேருந்து நிலையம் சென்ற 16 க்கும் மேற்பட்ட பேருந்துகளை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் அந்த பேருந்துகளில் பணியாற்றும் டிரைவர், கண்டக்டர் ஆகியோரிடம் உள்ள ஆவணங்களை சோதனையிட்டனர். இதில் அந்த பேருந்துகள் தான் செல்ல வேண்டிய வழிகளுக்கு பதிலாக மாற்று வழியில் செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த தனியார் பேருந்துகளுக்கு தலா ரூ.600 வீதம் 16 பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்