கும்பகோணத்தில் மாணவியை திருமணம் செய்துகொள்ளும்படி மிரட்டிய இளைஞர் கைது

கும்பகோணத்தில் மாணவியை திருமணம் செய்துகொள்ளும்படி மிரட்டிய இளைஞர் கைது
X

கைது செய்யப்பட்ட வீரப்பன்.

கும்பகோணத்தில் பிளஸ் 2 மாணவியை திருமணம் செய்துகொள்ளும்படி மிரட்டிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கும்பகோணம் அருகே சுவாமிமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேலாத்துக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி நீலத்தநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு பயின்று வருகிறார். இச்சிறுமி பள்ளிக்குச் சென்று வரும்போதெல்லாம் அதே பகுதியைச் சேர்ந்த வீரப்பன் என்ற 22 வயது இளைஞர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சுவாமிமலை காவல்துறை ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் வீரப்பனிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் புகார் உண்மை என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து வீரப்பனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்