/* */

சுவாமிமலை முருகன் கோயிலில் திருப்படி பூஜை

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, சுவாமிமலை முருகன் கோயிலில் திருப்படி பூஜை நடைபெற்றது.

HIGHLIGHTS

சுவாமிமலை முருகன் கோயிலில் திருப்படி பூஜை
X

சுவாமிமலையில் நடைபெற்ற திருப்படி பூஜை. 

கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலையில் உள்ள சுவாமிநாத சுவாமி கோயில், முருகனின் நான்காவது படைவீடாக திகழ்கிறது. இத்தலத்தில், ஓம் எனும் பிரணவ மந்திரத்தை தந்தைக்கே உபதேசம் செய்வித்ததால் குரு உபதேச தலம் என்ற புகழுடையது.

இக்கோயிலில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, தனுர் மாத பூஜை, விசுவரூப தரிசனம் நடைபெற்றது. சிறப்பு அபிஷேக, ஆராதனைக்குப் பிறகு, மூலவர் சுவாமிநாத சுவாமி தங்கக் கசவம், வைரவேல் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

தொடர்ந்து மகாதீபாரதனை, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மலைக்கோயிலில் உள்ள சன்னதி முன்பு ஆண்களும், பெண்களும் நெய்விளக்கேற்றி பிரார்த்தனை செய்து வழிபட்டனர். புத்தாண்டை முன்னிட்டு, முருகன் கோவிலில் உள்ள 60 தமிழ் வருட தேவதைகளின் பெயரில் அமைந்துள்ள 60 திருப்படிகளுக்கு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அறுபது குத்துவிளக்குகள் வைத்து பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.

Updated On: 1 Jan 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  4. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  5. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  6. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  7. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  8. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  9. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  10. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு