'திருநாகேஸ்வரம்' தேரோட்டம்

திருநாகேஸ்வரம் தேரோட்டம்
X
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருநாகேஸ்வரத்தில் தேரோட்டம் நடைபெற்றது.

கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் திருநாகேஸ்வரத்தில், ராகு தோஷம் நிவர்த்தி தலமான கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது.

பங்குனி உத்திரத்தையொட்டி இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கடந்த 19ம் தேதி கொடியேற்றமும்,23ஆம் தேதி ஒலை சப்பரத்தில் வீதிஉலாவும் நடைபெற்றது. முக்கிய விழாவான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. தேர்த் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை, உற்சவரான பிரகன் நாயகி சமேத நாகேஸ்வரர்சுவாமி தேரில் எழுந்தருளினார்.

பின்னர் தேரோட்டம் நடைபெற்றது. தேரினை ஏராளமான பக்தர்கள் 'நாகேஸ்வரா, நாகேஸ்வரா' என்ற கோஷத்துடன் தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்