திருநாகேஸ்வரம் பேரூராட்சி தேர்தலில் அ.தி.மு.க.வினர் வாக்கு சேகரிப்பு

திருநாகேஸ்வரம் பேரூராட்சி தேர்தலில் அ.தி.மு.க.வினர் வாக்கு சேகரிப்பு
X

திருநாகேஸ்வரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

திருநாகேஸ்வரம் 4-வது வார்டு மற்றும் 6வது வார்டில் அ.தி.மு.க.வினர் வாக்கு சேகரித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் பேரூராட்சி மன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் 4வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சர்மிளாபானு, 6வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தீபா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இவர்களை ஆதரித்து தஞ்சாவூர் வடக்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் தவமணி, திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் செம்மங்குடி முத்துகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலும், திருநாகேஸ்வரம் பேரூர் கழக செயலாளர் வைரவேல் முன்னிலையிலும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி வேப்பிலை செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளர் கலியபெருமாள், வார்டு செயலாளர்கள் சண்முகசுந்தரம், அண்ணாதுரை, நீலமேகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!