கும்பகோணத்தில் போலீஸார் கொடி அணிவகுப்பு

கும்பகோணத்தில் போலீஸார் கொடி அணிவகுப்பு

 தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா, கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில் சந்திப்பில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதி படுத்தும் வகையில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடைபெற்றது

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ம் தேதி கும்பகோணத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி கும்பகோணம் மாநகராட்சிக்கு 48 வார்டுகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

இதையடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதி படுத்தும் வகையில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.அணிவகுப்பை தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா, கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில் சந்திப்பில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அங்கிருந்து தொடங்கிய கொடி அணிவகுப்பு பல்வேறு தெருக்கள் வழியாக மகாமக குளக்கரையில் அடைந்தது.

இதில் கூடுதல் ஏடிஎஸ்பிகள் ஜெயச்சந்திரன், பிருந்தா, டிஎஸ்பிக்கள் அசோகன், வெற்றிவேந்தன், பூரணி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அழகேசன், பேபி, போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீஸார், ஆயுதப்படை போலீஸார் 100க்கும் மேற்பட்டோர் கந்து கொண்டனர்.

Tags

Next Story