சாலையின் நடுவே உள்ள மின்கம்பங்களை அகற்றும் பணி: எம்எல்ஏ அன்பழகன் ஆய்வு
கும்பகோணத்தில் சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த மின்கம்பங்கள் அகற்றும் பணியை எம்எல்ஏ அன்பழகன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
கும்பகோணம் லால்பகதூர் சாஸ்திரி ரோடு பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி சார்பில் 50க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாலை நடுவே அமைக்கப்பட்டது. மிகவும் குறுகலான இந்த சாலையின் நடுவே மின் கம்பங்கள் அமைக்கப்பட்டதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சாலையை கடக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
மேலும் சாலையின் நடுவே மின்கம்பங்கள் அமைக்கப்பட்டதால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பெரும் அவதி ஏற்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து இந்த மின்கம்பங்களை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்களும் பல்வேறு தரப்பினரும் நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் நகராட்சி பணியாளர்கள் சாலை நடுவே அமைக்கப்பட்டிருந்த மின்கம்பங்களை அகற்றும் பணியை மேற்கொண்டனர். இந்த பணிகளை கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன், கும்பகோணம் நகராட்சி ஆணையர் நவேந்திரன், நகரமைப்பு அலுவலர் பாஸ்கரன் மற்றும் நகராட்சி உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu