கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரோட்டம்

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரோட்டம்
X
கும்பகோணத்தில் சாரங்கபாணி கோவில் தேரோட்டம் நடைப்பெற்றது

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோவில் சித்திரைப் பெருவிழா கடந்த 6ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இந்த திருக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் மற்றும் திருத்தேர் திருவாபரணம் பெற்றதாகும். முக்கிய விழாவான திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாரங்கா சாரங்கா என வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

இந்நிகழ்வில் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், பெற்றோர் ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் இளையராஜா, மாநகர மேயர் சரவணன், துணை மேயர் தமிழழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!