இறுதி கட்ட பிரச்சாரம்

இறுதி கட்ட பிரச்சாரம்
X

கும்பகோணத்தில் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. கும்பகோணம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அன்பழகன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தார்.

தேர்தல் பிரச்சாரம் நாளை மறுநாள் மாலை நிறைவு உள்ளதையொட்டி கும்பகோணத்தில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. கும்பகோணம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் சாக்கோட்டை அன்பழகன் இன்று தனது இறுதி கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அதன்படி கும்பகோணம் கொட்டையூர் ரவுண்டானாவில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக முன் செல்ல பின்னால் திறந்த வேனில் நின்றபடி கும்பகோணத்தில் உள்ள 45 வார்டுகளில் வாக்கு சேகரித்த படி சென்று மகாமகம் குளம் அண்ணா சிலை அருகில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டார்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?