சுவாமிமலை அருகே உரக்கடை அடித்து உடைத்து சேதம் :மர்ம நபர்கள் கைவரிசை

சுவாமிமலை அருகே உரக்கடை அடித்து உடைத்து சேதம் :மர்ம நபர்கள் கைவரிசை
X
சுவாமிமலை அருகே அடித்து உடைக்கப்பட்ட உரக்கடை
சுவாமிமலை அருகே உரக்கடையை அடித்து உடைத்து சேதம் செய்த மர்ம நபர்களை போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.

சுவாமிமலை அருகே உள்ள திருப்புறம்பியம் கடைத்தெருவில் உரக் கடை நடத்தி வருபவர் கும்பகோணம் கீழஅய்யன் தெருவை சேர்ந்த பிச்சை பிள்ளை மகன் மதியழகன் (58). சம்பவத்தன்று இரவு கடையில் இருந்த பொழுது மர்ம நபர்கள் சிலர் உருட்டுக்கட்டையுடன் வந்து உரக்கடையை அடித்து உடைத்து நாசம் செய்து விட்டு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.

இதுகுறித்து உரக்கடை உரிமையாளர் மதியழகன் கொடுத்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு உரக்கடையை அடித்து உடைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story