தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கொங்கு ஈஸ்வரனை சிறைப்படுத்த வேண்டும்: இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா கோரிக்கை

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கொங்கு ஈஸ்வரனை  சிறைப்படுத்த வேண்டும்: இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா கோரிக்கை
X

கும்பகோணம், தலைமை தபால் நிலையம் முன், இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


''எம்.எல்.ஏ. கொங்கு ஈஸ்வரனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும்,'' என்பதை வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா அமைப்பினர் கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

''எம்.எல்.ஏ. கொங்கு ஈஸ்வரனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும்,'' என்பதை வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா அமைப்பினர் கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்திய இறையாண்மையை பாதுகாப்போம் என்று சத்தியப் பிரமாணம் செய்து பதவி ஏற்றுக்கொண்ட கொங்கு ஈஸ்வரன் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது திருச்செங்கோடு எம்.எல்.ஏ. ஈஸ்வரன் ஜெய்ஹிந்த், நன்றி என்று தெரிவித்தார்.

ஆனால், நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரின், ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை ஈஸ்வரன் உபயோகப்படுத்தவில்லை. தமிழகம் தலைநிமிர்ந்து விட்டது என்று பேசினார். இதற்கு முதலமைச்சரும், சபாநாயகரும், காங்கிரஸ் கட்சியும், அ.தி.மு.க.வும். பா.ஜ.க.வும் மௌனம் காத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களைக் கண்டிக்கிறோம். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தன் சித்தாந்தத்தில் இருந்து விலகிச் செல்வதாக தெரிகிறது.

எம்.எல்.ஏ. கொங்கு ஈஸ்வரனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறைப்படுத்தக் கோரியும், அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை பறிக்கக் கோரியும், அவரை நாடு கடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கும்பகோணம், தலைமை தபால் நிலையம் முன், இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா அமைப்பினர் தேசியக்கொடியுடன்பாரத மாதா வேடமணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில செயலாளர் பாலா தலைமை வகித்தார். இதில், குடந்தை நகர தலைவர் பிரபாகரன், ‌இளைஞரணி மாவட்ட தலைவர் விஜய், திருவிடைமருதூர் ஒன்றியத் தலைவர் ஜெயக்குமார், ஆலய பாதுகாப்பு பிரிவு வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!