/* */

கும்பகோணத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை ஆட்டோ டிரைவரை தேடுது போலீஸ்

தஞ்சை மாவட்டம் கும்பகோணததில் இளம் பெண்ஞுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் தேடிவருகின்றனர்.

HIGHLIGHTS

கும்பகோணத்தில்  பெண்ணுக்கு பாலியல் தொல்லை ஆட்டோ டிரைவரை தேடுது போலீஸ்
X

கோப்பு புகைப்படம்

கும்பகோணம் மேலக்காவேரியைச் சேர்ந்தவர் ஹசன். இவரது மனைவி சபீனாபானு(28). ஹசன் சவுதி அரேபியா நாட்டில் வேலை பார்த்து வருகிறார். சபீனாபானு தன் குழந்தைகள், மாமியாருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்பும் போது, அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அசாருதீன் என்பவருடன் சபீனாபானுவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதை பயன்படுத்திக் கொண்ட அசாருதீன் சபீனாபானுவோடு செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதைக்காட்டி அசாருதீன் மிரட்டி அவ்வப்போது பாலியல் தொல்லை கொடுப்பதாக கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் சபீனாபானு புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையில், மேலக்காவேரி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் கும்பகோணம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் மனுவை அளித்துள்ளனர்.

அதில், மேலக்காவேரியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் அசாருதீன் மற்றும் அவரது நண்பர்களும் சேர்ந்து, மேலக்காவேரி பகுதியில் உள்ள சில பெண்களை பணத்துக்காக இணையதளம் மூலம் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளதாகவும்.

இந்த செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக விசாரித்து கைது செய்து, பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர் இதுதொடர்பாக கும்பகோணம் டிஎஸ்பி பாலகிருஷ்ணன், கிழக்கு காவல் நிலைய போலீஸார் விசாரித்து அசாருதீனை தேடி வருகின்றனர்.

Updated On: 23 May 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு