/* */

திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயிலில் தைப்பூச விழா தொடக்கம்

திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

HIGHLIGHTS

திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயிலில் தைப்பூச விழா தொடக்கம்
X

கும்பகோணம் அருகே திருச்சேறை சாரநாத பெருமாள் கோயிலில், தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது, திருச்சேறை சாரநாத பெருமாள் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி, தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று, தொடங்கியது. முன்னதாக கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, கருடாழ்வார் அச்சிட்ட கொடியை மங்கள வாத்தியம் முழங்க பட்டாச்சாரியார்கள் ஏற்றினர்.

அப்போது, கொடிமரம் அருகே சாரநாயகிதாயாருடன், சாரநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து வரும் 26-ம் தேதி வரை நடைபெற உள்ள கோயில் விழாக்களில் பெருமாளும் தாயாரும் படிச்சட்டங்களில் உள்பிரகாரத்தில் புறப்பாடு நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக 19-ம் தேதி நிலைத் தேரோட்டமும், 26-ம் தேதி இரவு உற்சவப் பெருமாள் பஞ்ச லட்சுமிகளுடன் தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவம் காணுகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Updated On: 11 Jan 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  8. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  9. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  10. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு