சுவாமிமலை கோவில் வாசலில் பக்தர்கள் தைப்பூச வழிபாடு
கோவில் வாசலில் தீபமேற்றி வழிபட்ட பக்தர்கள்.
முருகனின் ஆறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாக, தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசித்து செல்வர். பலர், காவடி எடுத்தும், அலகு குத்தியும் வருவர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலால் தைப்பூசத்திற்கு முருகர் கோவில் உள்ளிட்ட அனைத்து மத வழிப்பாட்டு தலங்களும் மூடப்படும் என்று அரசு அறிவித்தது.
அதன்படி, சுவாமிமலை சுவாமிநாத சாமி கோவில் மூடப்பட்டிருந்தது. இருந்தாலும் ஏராளமான பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கோவிலுக்கு வந்தனர். பலர் பாத யாத்திரையாக வந்திருந்தனர். கோவில் மூடப்பட்டிருந்ததால் வாசல் முன்பு தீபங்கள் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்டனர். தங்களது நேர்த்திகடனையும் செலுத்தினர். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu