கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான் கோயிலில் கும்பாபிஷேகம்
விட்டல் ருக்மிணி சமஸ்தான் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான் கோயிலில், நேற்று காலை 11ம் கால யாகசாலை பூஜை பூர்ணாகுதி நடந்தது. காலை 8 மணி அளவில் மழை பெய்த நிலையில் யாகசாலையில் இருந்து மங்கல வாத்தியம் முழங்க கடம் புறப்பாடு நடந்தது.
பரனூர் மகாத்மா ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள், துக்காராம் மகராஜ், சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ ராம தீட்சிதர், கோயில் ஸ்தாபகர் ப்ரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் ஆகியோர் முன்னிலையில், கோயிலின் வானுயர்ந்த விமான கலசங்களுக்கு சிறப்பு பூஜையுடன் புனிதநீர் ஊற்றி, புஷ்பார்ச்சனை செய்வித்து மகா கும்பாபிஷேகம் நடந்தது.
பின்னர் மூலவர் பாண்டுரங்க சுவாமிகள் மற்றும் ருக்மிணி தாயார் ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்வித்து துளசி, மலர் அலங்காரத்துடன் மகா தீபாரதனை நடந்தது. கும்பாபிஷேக நாளில் கொட்டும் மழையிலும் திரளான பக்தர்கள் கோவிலில் வழிபாடு செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை திருக்கல்யாண வைபவம் நடந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu