பழவாத்தான்கட்டளையில் தேக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டியதாக புகார்

தேக்கு மரம் கடத்தல் தொடர்பாக, கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில், அதிமுக சார்பில், குடந்தை கிழக்கு ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன் தலைமையில் புகார் மனு அளித்தனர்.
கும்பகோணம் ஒன்றியம், பழவாத்தான்கட்டளை ஊராட்சிக்கு சொந்தமான சாய்ராம் பூங்காவில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தேக்கு மரங்களை, மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்றுள்ளனர். அரசுக்கு சொந்தமான வெட்டப்பட்ட மரங்களை மீட்டு, அதற்கு துணை போன நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கும்பகோணம் கோட்டாட்சியர் (RDO) அலுவலகத்தில் அஇஅதிமுக சார்பில், குடந்தை கிழக்கு ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன் தலைமையில் புகார் மனு அளித்தனர்.
இந்த நிகழ்வில், மேற்கு ஒன்றிய செயலாளர் என்.ஆர்.வி.எஸ் செந்தில், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் மகாலிங்கம், மாநில பிரிவு நிர்வாகிகள் லெனின், பாண்டியன், மாவட்ட விவசாயப்பிரிவு இணைச்செயலாளர் ஐயப்பன், முன்னாள் ஒன்றிய செயலாளர் அழகு. த.சின்னையன், குழந்தைவேலு, பேரூராட்சி செயலாளர் ஆசாத்அலி, கருப்பூர் பகவதி, பாண்டியன், உடையாளூர் ராமச்சந்திரன், பத்மகுமரேசன், கோவி.ரமணன், வெங்கடேசன், உடையாளூர் சுப்ரமணியன், அய்யா.முருகானந்தம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu