சுவாமிமலை கோவிலில் வருடாந்திர திருவிழா நடத்த கோரி கோட்டாட்சியரிடம் மனு
திருவிழா நடத்தக்கோரி கோட்டாட்சியரிடம் மனு கொடுக்க வந்த மக்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை ராஜவீதி மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள சர்வ சக்தி மாரியம்மன் திருக்கோவிலில் (இந்துசமய அறநிலையத்துறையுடன் இணைந்தது) வருடா வருடம் 15 தினங்கள் திருவிழா நடைபெறும். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயில் சுவாமிநாத சுவாமி திருக்கோவிலுக்கு அடுத்தபடியாக சுவாமிமலையில் அனைத்து தரப்பினரின் பொது கோவில் வழிபாட்டு தலம் ஆகும்.
இத்திருக்கோயிலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக திருவிழா நடைபெறாமல் இருந்தது. தற்போது திருவிழா ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் சீர்வரிசை எடுப்பது சம்பந்தமான பிரச்சினையில் திருவிழா நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுவாமிமலை அருள்மிகு சர்வசக்தி மாரியம்மன் - ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் கால தாமதம் இல்லாமல் உற்சவம் நடத்த வேண்டி முன்னாள் அறங்காவலர் வீரப்பன், தலைமையில் சுவாமிமலை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பலர் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாச்சியரிடம் மனு அளித்தனர்.
இந்நிகழ்வில் முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் ஜீவானந்தம், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் கல்யாண்குமார், பேரூராட்சி மன்ற தி.மு.க. உறுப்பினர் ஜெமினி, பி.ஜே.பி. மாவட்ட வர்த்தகர் அணி தலைவர் அன்பழகன், ம.தி.மு.க. பேரூர் செயலாளர் ஜெயராமன், தே.மு.தி.க. பேரூர் செயலாளர் ராஜேஸ்கண்ணா, பி.ஜே.பி.பேரூர் தலைவர் கணேஷ், பெளர்ணமி கிரிவல கமிட்டி தலைவர் சிவசங்கரன், ஏகநாதன், முத்துவெங்கட்ராமன், பேரூர் த.மா.கா. துணைத் தலைவர் ஜீவா.காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu