சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம்
சிறப்பு அலங்காரத்தில் சுவாமிமலை சுவாமிகள்.
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டு குழு டிரஸ்ட் சார்பில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம் நேற்று மாலை வல்லப கணபதி சன்னதியில் இருந்து துவங்கியது. இந்த கிரிவலத்திற்கு மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக அரசு தலைமை கொறடா கோவி. செழியன் கலந்துகொண்டார்.
மேலும் சிவத்திரு, திருவருட்செம்மல் இறைநெறி, இமயவன் வழிகாட்டுதலுடன் கூட்டு வழிபாடு மற்றும் கிரிவலமும் நடைபெற்றது. சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு டிரஸ்ட் நிர்வாகி கேசவராஜன், மேனேஜிங் டிரஸ்டி சிவசங்கரன், செயலாளர் சேகர், பொருளாளர் சுவாமிநாதன், ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், டிரஸ்டிஸ்கள் மாணிக்கம், சண்முகம், நெடுஞ்செழியன், கமிட்டி ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் கோவி.கல்யாணகுமார், ஜெமினி, வரதராஜன், ஆசிரியர்கள் ஜெயராமன், கணேசன், சிவக்குமார், சுவாமிநாதன், ராஜா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu