சுவாமிமலை ராஜவீதி மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா கோலாகலம்

சுவாமிமலை ராஜவீதி மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா கோலாகலம்
X

சுவாமிமலையில் ராஜவீதி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில் பக்தர்கள் பங்கேற்றனர்.

சுவாமிமலை ராஜவீதி மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா வெகு கோலாகலமாக நடைபெற்றது.

கும்பகோணம் அருகே சுவாமிமலை ராஜவீதி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மன் கோவிலில் திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைத்தப்படுவது வழக்கம்.

ராஜவீதி மாரியம்மன் கோவிலில் தெருவில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு சர்வ சக்தி மாரியம்மன் ஸ்ரீ காளியம்மன் 64வது உற்சவ விழா கோலாகலமாகத் துவங்கியது. இதன் ஒரு பகுதியாக சம்பிரதாயப்படி பூச்சொரிதல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

பூச்சொரிதல் விழாவில் சுவாமிமலை பெருமாள் கோவிலில் இருந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூத்தட்டு எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று ஆலயத்தை வந்தடைந்தனர். இந்நிகழ்ச்சியில் உபயதாரர்கள் வீரப்பன், மோகன், சிவகுருநாதன், சுவாமிநாதன், கணேசன், செந்தில்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.உற்சவ திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில் பக்தர்கள், கோவில் நிர்வாகிகள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!