நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் பெறுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் விமலநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணம் சுவாமிமலை அருகே ஏராகரம் நுகர்பொருள் வாணிபக் கழகம் முன்பு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் விமலநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து மாவட்ட செயலர் விமலநாதன் பேசியதாவது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் நெல் மூட்டைகளை வாங்குவதற்கு நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்கள் மாமுல் (லஞ்சம்) வாங்குகின்றனர். இது இந்தியா முழுவதும் ஆண்டு தோறும்450 கோடி ரூபாய் அளவிற்கு லஞ்சமாக பெறப்படுகிறது. எனவே சிபிஐ, மற்றும் தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்திட வேண்டும் என்றார் அவர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண் உழவர்கள் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
முன்னதாக, சுவாமிமலை அருகே ஏராகரம் கிராமத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 9ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு ஏராளமான விவசாயிகள் மலரஞ்சலி செலுத்தினர். அப்போது நம்மாழ்வாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சிறப்பு தபால் தலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் முன் வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu