/* */

சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய குடந்தை போர்ட்டர் டவுன்ஹாலில் விழா

குடந்தை போர்ட்டர் டவுன்ஹாலில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய 125-வது ஆண்டு விழா விரைவில் கொண்டாடப்பட உள்ளது.

HIGHLIGHTS

சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய குடந்தை போர்ட்டர் டவுன்ஹாலில்  விழா
X

குடந்தை போர்ட்டர் டவுன்ஹாலில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய 125வது ஆண்டு விழா கொண்டாட்டம் பற்றிய ஆலோசனை கூட்டத்தில் விமூர்த்தானந்த் மகராஜ் பங்கேற்றார்.

சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றி இந்தியாவின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்து தாயகம் திரும்பிய பின்னர் 1897ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி குடந்தைக்கு வருகை புரிந்து 3 நாட்கள் தங்கினார். நகரின் முக்கிய பிரமுகர்கள் சார்பில் அளித்த வரவேற்பிற்கு பதிலுரை அளிக்கும் வகையில் குடந்தை போர்ட்டர் டவுன் ஹால் உள்ளிட்ட இடங்களில் சுவாமி விவேகானந்தர் வேதாந்தத்தின் பணி எனும் தலைப்பில் வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றினார். குறிப்பாக எழுமின், விழிமின், குறிசாறும் வரை நில்லாது செல்மின் என்ற அவரது சொற்றொடர்களை குடந்தையில் தான் முதன் முதலில் கூறினார் என்பது குறிப்பிடதக்கது.

சிகாகோ சென்று சுவாமி விவேகானந்தர் தாயகம் திரும்பிய 125ம் ஆண்டு வரும் ஜனவரி 26ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அதன் ஒரு அம்சமாக குடந்தையில் சுவாமி விவேகானந்தர் வருகை தந்து உரையாற்றிய போர்ட்டர் டவுன்ஹால் வளாகத்தை தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் பார்வையிட்டார். இதில் குடந்தை எம்.எல்.ஏ. அன்பழகன், முன்னாள் நகராட்சி தலைவர் தமிழழகன், தி கும்பகோணம் கிளப் செயலாளர் விஜயகுமார், மாவட்ட பிரதிநிதி கரிகாலன், குடந்தை ராமகிருஷ்ண விவேகானந்த டிரஸ்ட் செயலாளர் வெங்கட்ராமன், சத்யநாராயணன், பாஸ்கர், பாலகுரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து குடந்தையில் சுவாமி விவேகானந்தர் சென்ற பள்ளிகளின் செயலாளர்களுடன் கலந்துரையாடல் நடந்தது. நகர மேல்நிலைப்பள்ளி செயலாளர் வேலப்பன், சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் தீபக் ரமேஷ், பாணாதுறை மேல்நிலைப்பள்ளி செயலாளர் கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் கூறுகையில், அகில உலக ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத்ஸ்மரணானந்த மகராஜ், துணைத் தலைவர் கவுதமானந்த மகராஜ் வழிகாட்டலுடன் பக்தர்களின் பங்களிப்போடு குடந்தையில் சுவாமி விவேகானந்தர் வரலாற்று சிறப்புமிக்க சொற்பொழிவாற்றிய 125ம் ஆண்டை முன்னிட்டு வரும் பிப்ரவரி 3,4 மற்றும் 5ம் தேதிகளில் குடந்தையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்திடவும், ஆண்டு முழுவதும் இளைஞர்கள், பெண்கள் மற்றும் பக்தர்களுக்கான பலவிதமான நிகழ்ச்சிகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவாற்றிய போர்ட்டர் டவுன் ஹாலில் நிர்வாக குழுவின் ஒத்துழைப்போடு திருவுருவச்சிலை அமைத்து சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்திட எம்.எல்.ஏ. அன்பழகன் உள்ளிட்டோர் முன்வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே போல் குடந்தை ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பள்ளிகளின் நிர்வாகக்குழு மூலம் சுவாமி விவேகானந்தர் வருகையை நினைவு கூறும் விதமாக பல்வேறு செயல் திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.

Updated On: 30 Nov 2021 1:19 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்