அழகாக இல்லை.. இளம் பெண்கள் பேசுவதில்லை.. மன அழுத்தத்தில் தற்கொலையா..?

அழகாக இல்லை.. இளம் பெண்கள் பேசுவதில்லை.. மன அழுத்தத்தில் தற்கொலையா..?
X

தற்கொலை செய்து கொண்ட மாணவன். 

கும்பகோணம் அருகே பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகே முகம் அழகாக இல்லை என்ற காரணத்தினால் பள்ளி மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகே சோழபுரம் அடுத்த பணகுடம் பகுதியைசேர்ந்த கூலித் தொழிலாளியான சங்கர் என்பவரின் மகன் பூவேந்தன். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தான் அழகாக இல்லை என்று அவருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு உள்ளது. இதனால் தன்னிடம் இளம்பெண்கள் யாரும் பேச முன் வருவதில்லை என தன்னுடைய சக நண்பர்களிடம் கூறி வருத்தம் தெரிவித்துள்ளார். இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை பணகுடம் பகுதியில் சுடுகாட்டில் தூங்கமூஞ்சி மரத்தில் சேலையில் தூக்கு மாட்டியபடி பூவேந்தன் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சோழபுரம் போலீசார் பூவேந்தன் உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தான் அழகாக இல்லாததால் தன்னிடம் இளம் பெண்கள் யாரும் பேசுவதில்லை என மன அழுத்தத்தில் இருந்ததாக அவனது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பூவேந்தன் தற்கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

கும்பகோணம் அருகே பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!