கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம்

கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.

கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் புதிய கட்டிடம் கட்டித் தரக்கோரி வாயில் முன்பு மாணவர்கள் மற்றும் மாணவிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை அருகே கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி கல்லூரி அலுவலகத்தின் வராண்டா குடிநீர் குழாய் அருகே ரஞ்சித் என்ற மாணவன் தண்ணீர் குடிக்கும்போது சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதில் அவர் நூலிழையில் உயிர் தப்பினார். மேலும் கல்லூரியில் உள்ள அனைத்து வகுப்புகளும், கழிப்பறைகளும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது.

இது குறித்து முன்கூட்டியே கல்லூரி நிர்வாகத்திடம் கூறியும், நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் கல்லூரி 1974ஆம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது கட்டடம் பல சேதங்களை அடைந்து முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இதனால் பெற்றோர்கள் மாணவர்களை கல்லூரிக்கு அனுப்புவதற்கு அச்சப்படுகிறார்கள். எனவே உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படும் முன் புதிய கட்டிடம் கட்டித் தரக்கோரி கல்லூரி வாயில் முன்பு மாணவர்கள் மற்றும் மாணவிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Tags

Next Story
ai solutions for small business