பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்த பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்

பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்த பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்
X

பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்த மாணவர்கள்

கும்பகோணத்தில் தனியார் பள்ளியில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களை அமரவைத்து பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது

கும்பகோணம் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களை ஒரு சேர அமரவைத்து பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாணவ-மாணவிகள் தங்களை பெற்ற தாய் தந்தையின் பாதங்களை கழுவி, மாலை அணிவித்து பூஜை செய்து ஆசி பெற்றனர். மேலும் அனைத்து மாணவ மாணவிகளும் தங்கள் பெற்றோர்கள் மட்டுமின்றி வந்திருந்த அனைத்து பெற்றோர்களின் பாதங்களை தொட்டு வணங்கினர்.

மேலும் கற்றுக்கொடுத்த குருவான ஆசிரியர்களின் பாதங்களை வணங்கி ஆசி பெற்றனர். இந்நிகழ்ச்சி குறித்து பள்ளி தாளாளர் கார்த்திகேயன் கூறுகையில், இந்த பூஜை மாணவர்களுக்கு எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் பொதுத்தேர்வுகளை தயக்கம் இன்றி சந்திக்கவும், வாழ்க்கையில் நல்ல ஒழுக்கங்களை கற்றுத்தந்த பெற்றோரின் அன்பும், ஆசியும் எப்போதும் வேண்டும் என்பதை உணர்த்தவும், குருவை எப்போதும் மதித்து நடக்க வேண்டும் என்பதை உணர்த்தவும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கார்த்தி வித்யாலயா பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். பள்ளி முதல்வர் மாணவ மாணவியர்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!