கும்பகோணம் கோட்ட தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை தொடக்கம்

கும்பகோணம்  கோட்ட தபால் நிலையங்களில்  தங்க பத்திரம் விற்பனை தொடக்கம்
X
இந்திய ரிசர்வ் வங்கி தங்க பத்திரம் முதலீடு திட்டத்தினை இன்று முதல்13-ஆம் தேதி வரை உள்ள காலத்திற்கு வெளியிட்டுள்ளது.

கும்பகோணம் தபால் கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள தங்கத்தில் முதலீடு திட்டத்தின்கீழ் இன்று முதல் தங்க பத்திரம் விற்பனை நடைபெற்று வருகிறது என தபால் கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய ரிசர்வ் வங்கி தங்க பத்திரம் முதலிடு திட்டத்தினை இன்று 9-ந் தேதி முதல் வருகிற 13-ந் தேதி வரை உள்ள காலத்திற்கு வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி தங்கத்தை ஒவ்வொரு யூனிட்டுகளில் வாங்கிக் கொள்ளலாம். ஒரு யூனிட் என்பது 24 காரட் தங்கத்தின் ஒரு கிராமுக்கு சமமாகும். ஒரு யூனிட்டின் விலை ரூபாய் 4 ஆயிரத்து 790 ஆகும். தங்கத்தை பத்திரமாக வாங்குவதன் மூலம் பாதுகாப்பும், தரமும் உறுதி செய்யப்படுவதுடன் இதர செய்கூலி சேதாரம் ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட செலவினங்கள் தவிர்க்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பொதுமக்கள் செய்யும் முதலீடு இந்தியன் ரிசர்வ் வங்கி மூலம் ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டியுடன் திரும்ப கிடைக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக அதிக லாபம் தரக்கூடிய திட்டமாக, இந்த தங்க பத்திரம் முதலீடு திட்டம் இருந்து வருகிறது. இதனால், இத்திட்டத்திற்கு பொதுமக்கள் அதிகம் வரவேற்பு அளித்துள்ளனர். கடந்த2016- 17 ஆம் ஆண்டில் இத்திட்டத்தில் முதலீடு செய்தவர்களின் முதலீடு கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது.

இத்திட்டத்தின்படி, கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட தலைமை தபால் நிலையம் மேலகாவேரி தபால் நிலையம் உள்ளிட்ட அனைத்து தபால் நிலையங்களிலும் 9 தேதி முதல் வருகிற 13ம் தேதி வரை தங்க பத்திரம் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இந்த சிறப்பு தங்க பத்திரம் திட்டத்தில் இணைந்து பயனடையலாம் அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!