கபிஸ்தலம் அருகே வீட்டுக்குள் புகுந்த 6 அடி உயரம் நல்ல பாம்பால் பீதி

கபிஸ்தலம் அருகே வீட்டுக்குள் புகுந்த 6 அடி உயரம் நல்ல பாம்பால் பீதி
X

வீட்டினுள் நுழைந்து படமெடுத்து பாடிய பாம்பு. 

கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதியில், வீட்டுக்குள் புகுந்த 6 அடி உயரம் நல்ல பாம்பு புகுந்ததால் பரபரப்பு நிலவியது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, கபிஸ்தலம் கீழக்கபிஸ்தலம் வெள்ளாளர் தெருவில் வசிப்பவர் சாம்பசிவம் மகன் விநாயகம் (46). இவர் பைனான்ஸ தொழில் செய்து வருகிறார். பொங்கல் அன்று மாலை, இவர் வீட்டின் கழிவறைக்கு சென்ற பொழுது கழிவறை உள்ளே ஆறடி உயர நல்ல பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் பதறிப்போன அவர், உடனடியாக பாபநாசம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் கலைவாணன் தலைமையில் தீயணைப்பு படையினர், விரைந்து வந்து ஆறடி உயர நல்ல பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்