இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் சிவாலய ஓட்டம்

இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் சிவாலய ஓட்டம்
X

சிவாலய ஓட்டம் ( கோப்பு படம் ) 

இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் சிவாலய ஓட்டம்

இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் சிவாலய ஓட்டம் நடைபெற்றது. மகா சிவராத்திரியை முன்னிட்டு ரஷ்யா உக்ரைன் போர் பதற்றம் குறைந்து அமைதி நிலவவும்,ரஷ்ய தாக்குதலில் பலியானவர்களின் ஆன்மா சாந்தியடையவும், மகாசிவராத்திரி தினத்தில் கும்பகோணத்தில் சிவாலய ஓட்டம் நடைபெற்றது.

சிவாலய ஓட்டம் கும்பகோணம் கொட்டையூர் கோடீஸ்வரர் கோவிலில் தொடங்கப்பட்டது பாஜக மாவட்ட துணைத்தலைவர் சோழராஜன் சிவாலய ஓட்ட த்தை தொடங்கி வைத்தார்.மாநில பொதுச்செயலாளர் பாலா, மாணவரணி தலைவர் சத்தியமூர்த்தி, மாணவரணி நகர தலைவர் மதன், மாவட்ட பொதுச் செயலாளர் ஆனந்த், மற்றும் நிர்வாகிகள் சிவா, கார்த்தி, ஹரி,ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். கொட்டையூர் கோடீஸ்வரர் கோயிலில் தொடங்கிய சிவாலய ஓட்டம், மேலக்காவேரி கைலாசநாதர் திருக்கோயில்,‌ மடத்துத்தெரு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில், பாணபுரீஸ்வரர் திருக்கோயில், கம்பட்ட விஸ்வநாதர் கோயில், ஆதிகும்பேஸ்வரர் கோயில், சோமேஸ்வரன் கோயில், நாகேஸ்வரன் கோயில், ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், காசி விஸ்வநாதர் திருக்கோயில், அபிமுகேஸ்வரர் திருக்கோயில், கௌதமேஸ்வரர் திருக்கோயில், இறுதியாக மகாமக மேல்கரையில் சிவாலய ஓட்டம் நிறைவு பெற்றது. பாஜக மாவட்ட செயலாளர் பொன்ராஜ் ரஷ்யா உக்ரைன் அமைதி நிலவ சிவாலய ஓட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

Tags

Next Story
ai ethics in healthcare