மாணவி சாவுக்கு நீதி கேட்டு கும்பகோணத்தில் சிவசேனா கட்சி ஆர்ப்பாட்டம்

மாணவி சாவுக்கு நீதி கேட்டு கும்பகோணத்தில் சிவசேனா கட்சி ஆர்ப்பாட்டம்
X

கும்பகோணத்தில் சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கும்பகோணத்தில் சிவசேனா கட்சியின் சார்பில் அரியலூர் மாணவி லாவண்யா சாவிற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிவசேனா கட்சியின் சார்பில் கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே கும்பகோணம் மாநகர் மாவட்ட பொது செயலாளர் குட்டி சிவக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சை மாவட்டம் மைக்கேல் பட்டி தூய இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவி லாவண்யாவை தற்கொலைக்கு தூண்டிய நிர்வாகத்தை கண்டித்தும், தற்கொலை செய்துகொண்ட மாணவி குடும்பத்திற்கு இரண்டு கோடி ரூபாய் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், லாவண்யா தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட கோரியும், தற்கொலைக்கு காரணமான கல்வி நிறுவன நிர்வாகிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், கல்வி கூட நிர்வாகிகளை உடனடியாக கைது செய்ய கோரியும் கல்வி நிறுவனத்தை உடனடியாக இழுத்து மூட கோரியும் கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தும் பள்ளிகள் கல்லூரிகள் அனைத்திலும் அரசு வருடத்திற்கு நான்கு முறை ஆய்வு செய்ய தனி கமிஷன் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் சிறுமிக்கு நீதி கேட்டும் இந்த ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் சிவசேனா கட்சியின் மாநில முதன்மை செயலாளர் சுந்தரவடிவேலன், காவிப்படை தலைவர் புலவஞ்சி போஸ், குடந்தை மாநகர் மாவட்ட செயலாளர் செல்லாதினேஷ், மற்றும் சிவசேனா கட்சியின் மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!