சுவாமிமலை பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இருவர் கைது

சுவாமிமலை பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இருவர் கைது
X

சுவாமிமலையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டவர்.

சுவாமிமலை பகுதியில் மளிகை கடைகளில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மஹாலட்சுமி மற்றும் போலீசார் சுவாமிமலை காவல் சரக பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்பொழுது சுவாமிமலையில் மளிகை கடை நடத்தி வரும் பாட்ஷா மகன் பாரூக் (51) என்பவர் மளிகைக்கடையில் இருந்த தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களையும், சுவாமிமலை அருகே உள்ள திருவலஞ்சுழி பெரியகருப்பன் மகன் சுந்தரராஜ் (58)


என்பவர் மளிகை கடையில் இருந்த தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!