நாற்று நட்டு நாம் தமிழர் கட்சி பிரச்சாரம்

நாற்று நட்டு நாம் தமிழர் கட்சி பிரச்சாரம்
X

கும்பகோணம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆனந்த் விவசாய வயல்களில் நடவு நட்டும், மாட்டுவண்டியில் சென்றும் வாக்கு சேகரித்தார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆனந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி இன்று கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்புறம்பியம், இன்னம்பூர், ஏரகரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு தனது ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஆனந்த் அங்கு நடவு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர்களிடம் நாற்றுகளை வாங்கி நடவு நட்டு துண்டு பிரசுரங்களை வழங்கி கரும்பு விவசாயி சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தினார். பின்னர் மாட்டு வண்டியில் வீதி வீதியாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.

Tags

Next Story