கும்பகோணத்தில் சாரண, சாரணியர் மாநில அளவிலான ஆளுனர் விருது தேர்வு முகாம்

கும்பகோணத்தில் சாரண, சாரணியர் மாநில அளவிலான ஆளுனர் விருது தேர்வு முகாம்
X

 கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் , சாரண, சாரணியர் மாநில அளவிலான ஆளுனர் விருதுக்கான (ராஜ்ய புரஷ்கார்) தேர்வு முகாம் நடந்தது.

கும்பகோணத்தில் சாரண, சாரணியர் மாநில அளவிலான ஆளுனர் விருதுக்கான தேர்வு முகாம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் , சாரண, சாரணியர் மாநில அளவிலான ஆளுனர் விருதுக்கான (ராஜ்ய புரஷ்கார்) தேர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு சாரணர் பிரிவின் தலைவியாக சித்ரா, சாரணியர் பிரிவின் தலைவியாக மதுபாலா ஆகியோர் பொறுப்பேற்று நடத்தினர்.

முகாமில் குடந்தை, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு கல்வி மாவட்ட 40 அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளிலிருந்து 153 சாரணர்களும், 146 சாரணியர்களும் கலந்து கொண்டனர். முகாமில் நுழைவு பாடங்கள், ஆக்கல் கலை, முதலுதவி, மதிப்பீடு, பாசறை திறன்கள், பாசறை முகாம் அமைத்தல் போன்றவற்றில் தேர்வு நடத்தப்பட்டது.

குடந்தை கல்வி மாவட்ட சாரண பயிற்சி ஆணையர் தமிழ்குமரன், மாவட்ட சாரண அமைப்பு ஆணையர் ரமேஷ், உதவி செயலர் ஆனந்த முருகன், இணை செயலர் கீதா, பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட இணைச் செயலர் தையல் நாயகி, ஒரத்தநாடு கல்வி மாவட்ட சாரணிய அமைப்பு ஆணையர் விஜயா மற்றும் அனைத்து வகை பள்ளிகளின் சாரண, சாரணிய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தேர்வு முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட பொருளாளர் பாஸ்கர் மற்றும் மாவட்ட செயலாளர் சாமிநாதன் ஆகியோர் இணைந்து மேற்கொண்டனர்.

Tags

Next Story
குடல் ஆரோக்கியத்தை ஆரோக்கியமா வெச்சுக்கணுமா? அப்ப இத கண்டிப்பா பண்ணுங்க!| how to improve gut health in Tamil