கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் அறிவியல் கண்காட்சி:எம்எல்ஏ பங்கேற்பு

கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் அறிவியல் கண்காட்சி:எம்எல்ஏ பங்கேற்பு
X

கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளை பாராட்டினார்

கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் அறிவியல் கண்காட்சியை எம்எல்ஏ அன்பழகன் பார்வையிட்டார்

கும்பகோணம் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கார்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தையொட்டி ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளின் அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் அறிவியல் கண்காட்சி போட்டி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளை பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் பெருமாண்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர், கொரநாட்டு கருப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் சுதா அம்பிகாபதி, மெட்ரிக் பள்ளி தாளாளர் கார்த்திகேயன், பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கண்காட்சியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி படுத்தினர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!