சசிகலா கருத்தை வலுப்படுத்த வேண்டும்: அமமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

சசிகலா கருத்தை வலுப்படுத்த வேண்டும்: அமமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
X

கும்பகோணத்தில், தஞ்சை வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

அதிமுகவை மீட்டு எடுக்கும் போராட்டத்தில் சசிகலா கருத்தை வலுப்படுத்த வேண்டும் என அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்.

கும்பகோணத்தில், தஞ்சை வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். மாநில துணைப் பொதுச் செயலாளரும், மாவட்ட செயலாளருமான ரங்கசாமி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு, தேர்தலில் பணியாற்றிய கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து அவர்களின் நலன் கருதி அறிக்கைகளையும், கோரிக்கைகளையும் வெளியிட்டு வரும் டிடிவி தினகரனுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு வேளாண்சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். மீனவர்களுக்கு எதிராக தேசிய கடல் சார் மீன்வள மசோதாவை திரும்பப் பெற வேண்டும்.

அதிமுகவை மீட்டெடுக்கும் போராட்டத்தில் சசிக்கலாவின் கருத்தை வலுப்படுத்தவேண்டும். எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழக வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய அனைத்து பணிகளையும் சிறப்பாக நிறைவேற்ற வேண்டும். அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் தமிழகத்தில் தலைசிறந்த இயக்கமாக உருவெடுத்திட உறுப்பினர் சேர்க்கைகளை அதிகரிக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் வடிவேல் வாண்டையார், மாநில பொறியாளர் அணி இணைச்செயலாளர் பிரக்தீஸ்வரன், ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், ஜெகன்சுரேஷ், சாமிநாதன், மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வடக்கு ஒன்றிய செயளாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.


Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!