கும்பகோணத்தில் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி

கும்பகோணத்தில் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு போலீசில்  தஞ்சம் அடைந்த காதல் ஜோடி
X

கும்பகோணம் போலீசில் தஞ்சம ் அடைந்த காதல்  ேஜாடி.

கும்பகோணத்தில் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

திண்டிவனத்தை அடுத்த ஏரக்குடியை சேர்ந்தவர் மனோகரன் மகள் கௌசிகா(22). இவரும் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த சேகர் மகன் பிரசாந்த் (28) இருவரும் சென்னையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர்.. இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பிரசாத்தும் கௌசிகாவும் கடந்த 20ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறினர்.

21ஆம் தேதி கும்பகோணத்தில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையில் கௌசிகா தந்தை மனோகர், தனது மகளை கடத்திச் சென்றுவிட்டனர் என திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரையடுத்து திண்டிவனம் போலீசார் கௌசிகாவிடம் செல்போனில் பேசிய போது, தனக்கு திருமணம் நடந்து விட்டதாக கூறி விட்டு, கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார்.

இதனையடுத்து காதலர் இருவர்களிடம் விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் ராணி, இருவரது பெற்றோர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்